ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜகத் தேசிய தலைவர்கள் மற்றும் இபிஎஸ் முடிவு செய்வார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்
எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா சந்திப்பு வழக்கமான ஒன்றுதான் என்றும் இபிஎஸ், அமித்ஷா சந்திப்பின்போது இருவரும் பல்வேறு கூட்டணி விஷயங்கள் குறித்து பேசியிருப்பார்கள் என அவர் கூறினார்.
“ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜக தேசியதலைவர்கள் மற்றும் இபிஎஸ் முடிவு செய்வர் என்றும் பிரதமர் எப்போதும் தமிழின் மீதும், தமிழக மக்களின் மீது அதீதப் பற்று வைத்திருக்கிறார் என்று எல்.முருகன் குறிப்பிட்டார்.
இளையராஜாவை நாடாளுமன்ற உறுப்பினராக்கிக் கௌரவித்தவர் நரேந்திர மோடி என்றும் பாஜக மாநில தலைவரின் சுற்றுப்பயணம் அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுகவை விரட்டுகின்ற கூட்டணியாக அமையும் என்று எல்.முருகன் தெரிவித்தார்.