சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனப் பாஜக தேசிய குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர்,
ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காகத் திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை எனக் கூறி அதனைக் கைவிட திமுக அரசு முடிவெடுத்துள்ளதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது எனவும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட அக்கட்சி முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராகக் கருணாநிதியின் சிலை வைத்தது மட்டும்தான் என அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.