போர் நேரத்தில் ஒரு தலைவர் எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட்டு இந்தியாவை வழி நடத்தியவர் பிரதமர் மோடி எனப் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலைத் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியவர்,
போர் நேரத்தில் ஒரு தலைவர் எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட்டவர் பிரதமர் மோடி என்றும் இந்தியாவை வழி நடத்தியவர் பிரதமர் மோடி என்று அவர் கூறினார்.
நேபாளம் மற்றும் வங்க தேசத்தில் நடந்தது போன்ற போராட்டங்கள் ஒரு நாளும் இந்தியாவில் நடக்காது என்றும் கடந்த முறையைவிட அடுத்த முறைப் பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.