கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!
Sep 12, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாவட்டம், செல்லூரில் கழிவுநீர்  கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, தெருக்களில் கழிவு நீர்  தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை  தற்போது காணலாம்…

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 23 மற்றும் 24-வது வார்டுகளில் அமைந்துள்ள எம்ஜிஆர்  தெரு, தியாகி பாலு தெரு, இந்திரா நகர், போஸ் வீதி மெயின் ரோடு, ஜீவானந்தம் தெரு, மணவாளநகர் போன்ற பகுதிகளில், பல மாதங்களாகக் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர்த் தேங்கி கிடக்கிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர்  தேங்கி கிடப்பதால் உணவு உட்கொள்ளவோ, இரவில் தூங்கவோ கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை  தெரிவித்துள்ளனர்.

குறிப்பாகக் குழந்தைகளின் உடல்நிலை அடிக்கடி பாதிப்பிற்குள்ளாவதாகவும், 2 நாட்கள் பள்ளிக்குச் சென்றால் அடுத்த 3 நாட்கள் விடுப்பு எடுக்கும் சூழல் உள்ளதாகவும் பெற்றோர்க் கவலை தெரிவித்துள்ளனர்.

கழிவுநீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்து, தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், ஏராளமான குடும்பங்கள் தங்கள் சோந்த வீடுகளை விட்டு வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். ஆறாக ஓடும் கழிவுநீரைக் கண்டு தங்கள் வீடுகளுக்கு வர உறவினர்கள் அஞ்சுவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் பகுதியை தற்காலிகமாக சுத்தம் செய்கின்றனரே தவிர, தங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கொடுக்க அவர்கள் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட சிறிய பைப்புகள் தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பால் போதவில்லை எனக் கூறும் செல்லூர் பகுதி மக்கள், கடந்த 5 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகம் வர சென்று மனு அளித்தும் தங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒரு நிரந்தரத் தீர்வு கொடுக்கவில்லை எனக் கதறும் அப்பகுதி மக்கள், தங்களது துயரத்தை ஒரு நாளில் சொல்லி மாளாது என விரக்தி நிறைந்த முகத்துடன் வேதனையை வெளிப்படுத்தினர்.

இந்தக் கழிவுநீர் கால்வாய் அடைப்பு பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என செல்லூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தவறும் பட்சத்தில் தங்கள் பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: MaduraiRoads flooded with sewage: The plight of people leaving their homesகழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள்
Share
Tweet
SendShare
Previous Post

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Next Post

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies