நவராத்திரி விழா கொண்டாட்டம்... - சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை....!
Sep 12, 2026, 11:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 07:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் ராஜாஜி காதி பவனில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனைக் களைகட்டியுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு…

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி விழா. மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரனுடன் 9 நாட்கள் கடும் போர் புரிந்த ஆதிபராசக்தி, அந்த அசுரனை 10-வது நாளில் வதம் செய்தார். மக்களைப் பெருங்களிப்பில் ஆழ்த்திய இந்த வெற்றியையே மக்கள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நவராத்திரி விழாவையொட்டி மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது வாடிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா நாடு முழுவதும் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 1-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், நவராத்திரி விழாவையொட்டி சேலம் மாவட்டத்திலுள்ள ராஜாஜி காதி பவனில் கொலுபொம்மை விற்பனை களைகட்டியுள்ளது. இதனால் பல வகையான கொலு பொம்மைகளை வாங்கிச் செல்ல அங்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இங்கு விற்கப்படும் பொம்மைகள் அனைத்தும் கைவினைக் கலைஞர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டவை என்பது தனிச் சிறப்பு. அதன் காரணமாகவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து கொலு பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாக ஏராளமான தாய்மார்கள் அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளுக்குக் கொலு பொம்மைகளை இங்கிருந்து வாங்கி அனுப்பி வருகின்றனர்.

வெளிநாடு மட்டுமின்றிப் பெங்களூர், ஓசூர், ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கும், இங்கிருந்து அதிக அளவில் பொம்மைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆண்டு துவக்கத்திலேயே ராஜாஜி காதி பவனில் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால் அதீத மகிழ்ச்சியில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவராத்திரி கொண்டாட்டத்தில் மக்கள் மனதில் மகிழ்ச்சியை பரப்பும் சேலம் ராஜாஜி காதி பவனின் கொலு பொம்மைகள், கைவினை கலைஞர்களின் திறமையையும், வாழ்வாதாரத்தையும் உலகளவில் காட்சிப்படுத்தியிருக்கின்றன என்றால் மிகையில்லை.

Tags: Navratri festival celebration... - Hot sale of Kolu dolls....!நவராத்திரி விழா கொண்டாட்டம்கொலு பொம்மை விற்பனை
Share
Tweet
SendShare
Previous Post

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

Next Post

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies