ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் - செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!
Sep 13, 2026, 01:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவின் புதிய முயற்சிகள் மூலம் யானைகளை கட்டுப்படுத்த முடியும் என விலங்கு நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. மலைப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் இறங்கும் காட்டு யானைகள் விவசாயத் தோட்டங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சூறையாடுவதால், அப்பகுதி மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் இருந்து முத்து மற்றும் சுயம்பு ஆகிய இரு கும்கி யானைகள் அப்பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே வனப்பகுதியை ஒட்டியுள்ள ஊர்களான தடாகம், தொண்டாமுத்தூர்ப் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக, காட்டு யானைகள் அதிகளவில் உலா வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதனால் தங்கள் விவசாயத் தோட்டங்களை பாதுகாக்க விவசாயிகள் தூக்கத்தைத் தொலைத்து காவலுக்கு இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிலையில், காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறைக்கு, தமிழக அரசு நவீன உபகரணங்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல, சேதமடைந்த பயிர்களைக் கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே நீதிமன்ற உத்தரவின்படி விவசாய நிலங்களைச் சுற்றி வேலிகள் அமைப்பது யானைகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வாகாது என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். யானைகளின் வலசைப் பாதைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதால், அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து செல்வது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத் தமிழக அரசு செயற்கை நுண்ணறிவு போன்ற தற்கால நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காட்டு யானைகளைப் போதிய உணவின்றித் தவிப்பதே அவைக் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலங்களில் யானைகள் விரும்பும் உணவுகளை வனப்பகுதியில் வளர்க்க வனத்துறைச் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதுபோன்ற நடைமுறைகள் தற்போது கிடப்பில் போடப்பட்டிருப்பது யானைகள் நடமாட்டம் அதிகரிக்க காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வன வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் யானைகள் மற்றும் மனிதர்களிடையே சமநிலையை ஏற்படுத்தலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

Tags: People worried about elephants intruding into town - request the government to use artificial intelligenceசெயற்கை நுண்ணறிவைகோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி
Share
Tweet
SendShare
Previous Post

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

Next Post

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies