மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!
Oct 27, 2026, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் மந்தகதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரித்த தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்திக் குழுவை  திமுக கவுன்சிலரின் மகன் மிரட்டி தாக்க முற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் கடந்தும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து நடவடிக்கை எடுக்காத திமுக அரசு, அது குறித்து செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களைத் தாக்க முற்பட்டிருப்பதற்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

சென்னைச் சூளைமேடு பகுதியில் சரிவர மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சூளைமேடு மட்டுமல்லாது சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும், தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் புகார்கள் குவியத் தொடங்கின.

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தை வெளிக்கொண்டு வரும் வகையிலும், அதற்கு உரிய தீர்வு காணும் வகையிலும் தமிழ்ஜனம் தொலைக்காட்சி சென்னை மாநகர் முழுவதும் தனது கள ஆய்வைத் தொடங்கியது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சூளைமேடு மட்டுமல்லாது கோடம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர், தி.நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் என எங்கெங்கெல்லாம் மழைநீர் வடிகால் பணிகள் மந்தமாக நடைபெறுகிறதோ? அவற்றை எல்லாம் செய்தி சேகரித்து அரசு நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கள ஆய்வின் போது பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதும், பணிகள் நடைபெறுவதற்கான எச்சரிக்கை பலகைகள் கூட இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், மழைநீர் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்பட்டு மூடப்படாத நிலையில் இருக்கும் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதும் கள ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக மந்தமாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாகச் சென்னை அசோக்நகர் 131வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தியாளர் பாவேந்தர் வழக்கம் போல செய்தி சேகரிக்கச் சென்றார்.

பல மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதோடு, காலை 11 மணி வரை எந்தவிதப் பணிகளும் நடைபெறாதது குறித்து செய்தி சேகரித்த போது அங்கு வந்த திமுக நிர்வாகிகள் சிலர் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தியாளரை தாக்க முயன்று ஒளிப்பதிவை நிறுத்த சொல்லி மிரட்டினர்.

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை மிரட்டியது அசோக் நகர் பகுதியின் 131வது வார்டு உறுப்பினர் கோமதி மணிவண்ணனின் மகன் செந்தில் என்பதும் தெரியவந்துள்ளது. திமுக ஆட்சியமைந்த நான்கு ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஒதுக்கியதாகக் கூறும் சென்னை மாநகராட்சி அதற்கான எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போதும் சென்னை மாநகர மக்கள் தத்தளித்துக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது, 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துவரும் நிலையில் தமிழ் ஜனம் நடத்திய கள ஆய்வில் 50 சதவிகிதம் பணிகள் கூட நிறைவடையவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அது தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை மிரட்டி தாக்க முயன்ற திமுக நிர்வாகிகளின் அடாவடித் தனத்திற்குத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Tags: tamil janam tvchennai news todayRainwater drainage works in Mandagati: DMK councilor's son tries to attack Tamil Janam journalist who exposed it
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

Next Post

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

Related News

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies