கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் சுமார் ஆயிரத்து 500 குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தன.
முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கியதால் வெளியே வர முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் திருநின்றவூர் இந்திரா நகர் பகுதியில் சுமார் ஆயிரத்து 500 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.
முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்களும், மாணவர்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். மழைக் காலங்களில் அங்கு வெள்ளநீர் தேங்குவதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.