திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியது.
வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான வள்ளிப்பட்டு, செக்கு மேடு, நிம்மி பட்டு, வலையாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது பெய்த இந்த மழையால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
நியூ டவுன், இக்பால் சாலை, ஜமாத் ரோடு உள்ளிட்ட சாலையில் மழை நீர் தேங்கியது. கழிவு நீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதே போல அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் நோயாளிகளும் அவதி அடைந்தனர்.