அகமதாபாத்தில் ஏர் இந்திய விமானம் விபத்துக்குளான சம்பவத்தில் போயிங் நிறுவனம் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
260 பேரை பலிகொண்ட இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் டெலாவர் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
அதில் விமானத்தை வடிவமைத்த போயிங் நிறுவனம் மற்றும் எரிபொருள் சுவிட்சுகள் வழங்கிய ஹனிவெல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் உயிரிழந்தவர்களுக்குக் கூடுதலாக இழப்பீடு தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.