மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் ஐ-போன் 17 சீரிஸ் வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. இதில், ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் விற்பனைக்காக வந்துள்ளன.
இந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் செல்போன்களை வாங்குவதற்காக மும்பை, டெல்லி, பெங்களூருவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் அதிகாலை முதலே இளைஞர்கள் குவிந்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோன்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இந்தியாவில் ஐபோன் 17 மாடல்களின் விலை 89 ஆயிரம் ரூபாயில் இருந்து ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் ஐ-போன் 17 சீரிஸ் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.
அப்போது சில இளைஞர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.