மன்னிப்பு கேட்டாரா நடுவர் பைகிராஃப்ட்? : PCB வெளியிட்ட வீடியோ திட்டவட்டமாக மறுத்த ICC!
Aug 31, 2026, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

மன்னிப்பு கேட்டாரா நடுவர் பைகிராஃப்ட்? : PCB வெளியிட்ட வீடியோ திட்டவட்டமாக மறுத்த ICC!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 02:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது.

இதற்குப் போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாகத் தவறாக சித்தரித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீடியோ வெளியிட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.

ஆசியக்கோப்பை  தொடரில் கடந்த 14ம் தேதி துபாயில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி இமாலய வெற்றிப் பெற்றது இந்தியா.

போட்டிக்கு முன்னதாகவோ, போட்டிக்குப் பிறகோ இரு அணி வீரர்களுக்கும் ஒருவருக்கொருவர்  கைகுலுக்கவில்லை… டாஸ் போடும்போது, போட்டி அம்பயர் ஆண்டி பைகிராஃப்ட் கைகுலுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகப் பாகிஸ்தான் அணி குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ஆசிய கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசிய கோப்பை ஐசிசி அம்பயருமான ஆண்டி பைகிராப்ட், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் அணி மேலாளரிடம் மன்னிப்புக் கேட்டதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் செப்டம்பர் 14ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக நடத்தை விதிகள் மீறப்பட்டதா என்பதை விசாரிக்க ஐசிசி விருப்பம் தெரிவித்தது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அறிக்கை  கூறியது.

இந்த அறிக்கையுடன் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பயிற்சியாளர் ஹெசன் உடன் பைகிராப்ட் பேசிய வீடியோவையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது.

ஆனால் பாகிஸ்தான் கூற்றுக்களை ஐசிசி வட்டாரங்கள் மறுத்துள்ளன. கைலுக்கலை நிறுத்திய காரணத்திற்காகப் பாகிஸ்தான் கேப்டனிடமோ அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமோ பைகிராஃப்ட் மன்னப்பு கோரவில்லை என்றும், தவறான தகவல் தொடர்புக்காக மட்டுமே அவர் வருத்தம் தெரிவித்திருந்தார் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது ஐசிசி.

அம்பயர் ஆண்டி பைகிராஃப்ட், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வழிகாட்டுதல்படியே செயல்பட்டுள்ளதால், அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் ஆண்டி பைகிராஃபட் குற்றவாளி அல்ல என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் தவறான தகவல் தொடர்புக்கான பொறுப்பு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அரங்க மேலாளரிடம் உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

கைகுலுக்கல் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை கோருவது ஒருபக்கம் இருந்தாலும், தகுந்த ஆதாரங்களை வழங்கினால் மட்டுமே எந்தவொரு விசாரணையும் நடைபெறும் என ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது கைகுலுக்க வேண்டாம் என்ற கொள்கை பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்கு அறிந்திருந்ததாகவும், இருப்பினும் இந்த நாடகத்தை ஏன் உருவாக்கியது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Tags: நடுவர் பைகிராஃப்ட்?Did umpire Bycroft apologize?: ICC categorically denies PCB's video
Share
Tweet
SendShare
Previous Post

ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் -அதிகாலை முதலே குவிந்த இளைஞர்கள்!

Next Post

கிருஷ்ணகிரி : மறைந்த இந்து முன்னணி நிறுவனரின் 98வது பிறந்தநாள் விழா!

Related News

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies