திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்த நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
செங்கம் அருகே உள்ள கோலந்தாங்கள், அமர்நாதபுதூர் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெல் நாற்றுகள் பயிரிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் செங்கம் சுற்றுவட்டாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க வனப்பகுதிகளில் தடுப்பணைகளை அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.