தெலங்கானாவில் தாயின் நகைகளுக்காக மகன்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்மம் மாவட்டம், லட்சுமிபுரத்தில் குடும்ப சொத்துகளை பிரிப்பதில் சகோதரர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாகத் தாயின் நகைகள் யாருக்கு என்பதில் ஏற்பட்ட சண்டையால் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
அவர்களது மனைவிகளும் குடுமிப்பிடி சண்டை போட்டனர். இதில் நால்வரும் படுகாயமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















