திருப்பத்தூர் பெரியார்நகர் பகுதியில் கனமழை காரணமாக கழிவுநீருடன் மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் சுற்றுப்பகுதியில் பரவலாக பெய்த கனமழையால், சாலைகளில் ஓடிய தண்ணீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். ஒரு கட்டத்தில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு வழிவிடாமல் அவர்களை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டவர்கள் தாக்க முயற்சித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையாளர் சாந்தி, தாசில்தார் நவநீதம் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.