திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற மாணவி உடுமலைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியின் அருகே அமைந்துள்ள விடுதியில் தங்கிக் கல்வி பயின்ற மாணவி, மதிய உணவு அருந்துவதற்காக விடுதிக்குச் சென்றுள்ளார்.
உணவருந்திய பின், பள்ளி வகுப்பறைக்குச் சென்ற அவர்ச் சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார்.
தொடர்ந்து அவரை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டைப் போலீசார் மற்றும் கோட்டாட்சியர் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.