கோவை மாவட்டம், சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் பச்சிளங் குழந்தைச் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழ்க்கில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளது.
சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மரியலூயில், ராதாமணி தம்பதி கடந்த 23 ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.
இதனால் வைஷாலி என்பவரின் தங்கை மூலம் மகாராஷ்டிரா சென்று அவருக்குத் தெரிந்த தம்பதியின் உடல் வளர்ச்சி அடையாத குழந்தையை தத்தெடுத்து வந்துள்ளனர்.
குழந்தையை தத்தெடுத்த போதே உடல்நிலைச் சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 13ம் தேதி குழந்தையைத் தத்தெடுத்து வந்த அன்றே குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து, குழந்தையை ரயில் தண்டவாளத்தில் வைத்துவிட்டு, சம்பிரதாயப்படி கோழி அறுத்து மஞ்சளை தூவியுள்ளனர்.
இது அனைத்தையும் கண்டுபிடித்த போலீசார், மரியலூயிஸ், ராதாமணி, பிரவீன்குமார், கீர்த்திகா, அக்சய், வைஷாலி ஆகிய 6 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.