பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் - நடக்கப்போவது என்ன?
Jul 23, 2026, 02:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானின் முக்கிய விமான தளமான பக்ராமை  கைப்பற்ற அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால், அந்த விமான தளத்தை விட்டுக்கொடுக்க முடியாது எனத் தலிபான் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாக்ராம் தளத்தின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தான் தலைநகர்  காபூலில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது பக்ராம் விமான தளம். 1,492 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தத் தளம், 1950களில் சோவியத் அரசால் கட்டப்பட்டது.

அதிநவீன ஆயுதங்களை  கையாளும் வசதி, நவீனக் கட்டுப்பாட்டு கோபுரம், 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை, சுரங்க பாதை உள்ளிட்டவற்றை இந்தப் பக்ராம் விமான தளம் கொண்டுள்ளது. இப்பகுதியில் சிறைச்சாலையும் உள்ள நிலையில், முந்தைய காலங்களில் இங்குதான் தாலிபன் மற்றும் அல் கொய்தா அமைப்பை சேர்ந்த முக்கிய கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இத்தனைக்கும் மேலாகச் சீன அணுசக்தி நிலையங்களுக்கு அருகாமையில் பக்ராம் விமான தளம் அமைந்துள்ளது. கடைசியாகக் கூறப்பட்ட இந்தக் காரணம்தான், இந்தப் பகுதியின் மீது அமெரிக்காவின் பார்வையை ஈர்த்துள்ளது. இந்த விமான தளம் அண்மைக் காலம் வரை, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது.

2001ம் ஆண்டு நடத்தப்பட்ட இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானுக்குள் நுழைத்த அமெரிக்க ராணுவம், அங்கு தனது துருப்புகளை நிறுத்தி வைத்தது. ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகும்கூட அமெரிக்கத் துருப்புகள் ஆப்கானிஸ்தானை விட்டு வௌியேறவில்லை.

இந்நிலையில், ராணுவ செலவு உள்ளிட்ட சில காரணங்களால் 2021ம் ஆண்டு அமெரிக்கத் துருப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அப்போது, பக்ராம் விமான தளத்தில் இருந்தும் அமெரிக்க ராணுவம் வெளியேறியது. அந்தச் சமயத்தில் அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் இருந்தார்.

பக்ராம் விமான தளத்தைத் தாலிபான்களிடம் விட்டுக்கொடுத்த பைடனின் நடவடிக்கைக்கு ட்ரம்ப் தொடக்கம் முதலே அதிருப்தி தெரிவித்து வந்தார். இந்நிலையில், அந்த விமான தளத்தை அமெரிக்கா மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அவர் வெளிப்படையாகவே தெரிவிக்கத் தொடங்கியுள்ளார்.

லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், பக்ராம் விமான தளம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது எனக் கூறினார். இந்தத் தளம் மேற்கு சீனாவிற்கு அருகாமையில் உள்ளதால், அதனை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், சீனா தனது அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் இடத்திலிருந்து ஒரு மணிநேரத் தொலைவில்தான் பக்ராம் உள்ளதையும் அவர்ச் சுட்டிக்காட்டினார்.

ஆனால், ஆப்கான் அரசு பக்ராம் விமான தளத்தை விட்டுதர முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இது குறித்து பேசிய ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாகிர் ஜலால், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானும் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகள் மீண்டும் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ஆசியாவில் தனது துருப்புகளை மீண்டும் நிலை நிறுத்தவும், சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் இந்த விமான தளம் அத்தியாவசியமானது என அமெரிக்கா கருதுகிறது. எனவே, என்ன விலைக் கொடுத்தேனும் பக்ராம் தளத்தைக் கைப்பற்றும் முடிவில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

Tags: americausaUS targets Bagram Air Base: Afghans refuse to give up - what will happen?
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் – மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?

Next Post

சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தை – 6 பேர்  கைது!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies