தேஜாஸ் எம்கே-2 இலகுரகப் போர் விமானங்களுக்கான என்ஜின்களை, சஃப்ரானுடன் இணைந்து தயாரிப்பதற்கான ஒத்துழைப்பு முன்மொழிவுகளைப் பிரான்ஸ் அனுப்பியுள்ளது.
Tejas Mk-2 திட்டம் அமெரிக்காவின் GE F414 (98 kN thrust) என்ஜினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் அதை வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் அதிகமான செலவுகளால் இந்தியா விரைவில் மாற்றுத் திட்டங்களை உருவாக்கத் திட்டமிட்டது.
பிரான்ஸின் சாஃப்ரான் நிறுவனம், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து Tejas Mk-2 போர் விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் சாஃப்ரான் நிறுவனம் தேஜாஸ் எம்.கே-2 ஜெட் விமானத்துக்கும், அடுத்த தலைமுறைக்கான நடுத்தர போர் விமானத்துக்கும் இரண்டு எஞ்சின்களை வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தேஜாஸ் எம்கே-2 ஜெட் விமானத்திற்கு எஞ்சின் உற்பத்தி அமைக்கும் திட்டத்திற்குச் சஃப்ரான் நிறுவனம் முன்மொழிவுகளை அனுப்பியிருக்கிறது.
அதனை டிஆர்டிஓ என்றழைக்கப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.