நகைத் திருட்டு குறித்து நிகிதா அளித்த புகார் உண்மையானதா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படைப் போலீசார், அவரைத் துன்புறுத்தி அடித்துக் கொலைச் செய்தனர்.
இது தொடர்பான வழக்கைச் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நிகிதா நகைத் திருட்டு குறித்த புகார்த் தொடர்பாக தனியாக விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 15ம் தேதி முதல் நிகிதா நகைத் திருட்டு குறித்த புகார் தொடர்பான விசாரணையைச் சிபிஐ தொடங்கியது.
இந்தநிலையில் திருப்புவனத்தில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது நிகிதா புகார் அளித்த தினம் மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் ஏதேனும் நகைகள் அடகு வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.