பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்காவிட்டால் ஆப்கானிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், 2001ல் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பாக்ராம் விமான தளத்தை அமெரிக்கா விரிவுப்படுத்தியதாகவும், 2021ல் அமெரிக்க படைகள் திரும்பப் பெற்றதால் காபூலில் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசாங்கம் தலிபான் இயக்கத்தால் கவிழ்க்கப்பட்டதாகவும் கூறினார்.
அமெரிக்க தளங்களையும் தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசு கையகப்படுத்தியதாக கூறியுள்ள அவர், அதனை திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்காவிட்டால் ஆப்கானிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப், பாக்ராம் விமான தளத்தை கைப்பற்ற, தான் என்ன செய்யப் போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் தெரிவித்தார்.