உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நவராத்திரியையொட்டி அலங்கார பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது.
கொலு வைப்பது, நவராத்திரி பூஜைக்கு கலசம் வைத்து கொண்டாடுவது என்று வெவ்வேறு வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான நவராத்திரி நாளை தொடங்கி அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டி உள்ளது. அந்த வகையில் அயோத்தியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனை கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜை பொருட்கள், அலங்கார பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர்.
மேற்குவங்கத்தில் நவராத்திரி விழாவை ஒட்டி துருப்பிடிக்காத இரும்பினால் ஆன காளி தேவி சிலையை வடிவமைத்து கலைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் பட்டாச்சார்ஜி என்ற சிற்பக் கலைஞர், அதிநவீன தொழில்நட்பத்துடன் கூடிய பந்தலை அமைத்துள்ளார். இந்த பந்தலில் துருப்பிடிக்காத இரும்பினால் காளி தேவியின் சிலையை பட்டாச்சார்ஜி தத்ரூபமாக வடிமைத்துள்ளார். சிலையின்கீழ் குழந்தை வடிவில் விநாயகர், முருகர் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.