மதுரையில் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக செல்வேன் என தெரிவித்தார்.
தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்த அவர், பாமகவிடம் கூட்டணி குறித்து விரைவில் பேசுவேன் என்றும் கூறினார்.
இதனிடையே திண்டுக்கல்லில் நடைபெற்ற பாஜகவின் இரண்டாவது பூத் கமிட்டி மண்டல மாநாடு நிறைவடைந்த உடன் பாஜகவினர் தாமாகவே நாற்காலிகளை அடுக்கி வைத்தனர்.
அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டங்களில் தனியார் மற்றும் பொது சொத்துக்கள் தொண்டர்களால் சேதமாகும் நிலையில், பாஜகவினரின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.