திண்டுக்கல்லில் பாஜகவின் இரண்டாவது பூத் கமிட்டி மண்டல மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் மண்டல வாரியாக பூத் கமிட்டி மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி நெல்லையில் முதல் பூத் கமிட்டி மண்டல மாநாடு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல்லில் இரண்டாவது பூத் கமிட்டி மண்டல மாநாடு நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன், தமிழக பாஜக பூத் கமிட்டி மாநில பொறுப்பாளர் ஆர்.என்.ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.