சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதி சுற்றில் தோல்வியடைந்த சாத்விக் – சிராக் இணை வெள்ளிப்பதக்கம் வென்றது.
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை, தென்கொரியாவின் கிம் வோன்-ஹோ மற்றும் சியோ சியுங்-ஜே இணையுடன் மோதியது. இதில் 21-19, 21-15 என்ற செட் கணக்கில் கொரிய குடியரசு இணை வெற்றிப் பெற்றது.