H-1B விசா இல்லை என்றால் அமெரிக்க அறிவியல் நிறுவனம் சரிந்துவிடும் என இயற்பியலாளர் மிச்சியோ காகு எச்சரிக்கை விடுத்தது 9 ஆண்டுகளுக்குப் பிறகு பேசுபொருளாகியுள்ளது.
H-1B விசாவிற்கு விண்ணப்பம் செய்வதற்கான கட்டணத்தை ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாயில் இருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் இந்தியர்களை விட அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பு ஏற்பட நேரிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க இயற்பியலாளர் மிச்சியோ காகு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த மாநாட்டில் H-1B இல்லாமல் சிலிக்கான் பள்ளத்தாக்கு இருக்காது என மிச்சியோ கூறினார்.
அமெரிக்காவில் Phd படித்தவர்களில் 50 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் எனவும் அமெரிக்கா உலகின் அனைத்து மூளைகளையும் உறிஞ்சும் ஒரு காந்தம் எனவும் தெரிவித்தார்.
H1B விசாவை அகற்றிவிட்டால் அமெரிக்கப் பொருளாதாரம் சரிந்து விடும் எனவும் அவர் எச்சரித்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பேசியது தற்போதைய சூழலுக்கும் பொருந்துவதாகவே உள்ளது.