மஹா அவதார் நரசிம்மா படம் அதன் பட்ஜெட்டை விட 7 மடங்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரமாண்டமான அனிமேஷன் திரைப்படமாக உருவான இப்படம் ஜூலை மாதம் 25ம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை கேஜிஎப் படத்தைத் தயாரித்த homble films தயாரித்திருந்தார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற மஹா அவதார் நரசிம்மா திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் பட்டைய கிளப்பியது. இந்த நிலையில், இப்படம் 326 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றுள்ளது.