ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் எனப் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் கிரிக்கெட் விமர்சகர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஸ்டேஜ் பிரிவு போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
தொடர்ந்து சூப்பர் 4 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வெற்றியைப் பறிகொடுத்தது பாகிஸ்தான். ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையே கைகுலுக்குவது போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நடைபெற்ற கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் ஒருவர் தெரிவித்த கருத்து அதிர்ச்சியையைும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் எதிராளியைப் பாகிஸ்தான் வீரர் கொல்ல ஆரம்பித்தால் வெற்றிப் பெறுவோமா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த கிரிக்கெட் விமர்சகர், துப்பாக்கிச் சூடு நடத்தி ஆட்டத்தை முடிக்க வேண்டும் என நம்புகிறேன் எனவும் இல்லையெனில் நாம் வெற்றியை இழக்க நேரிடும் எனவும் கூறினார். இந்தக் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களைத் தீவிரவாதிகளாகவே மாற்றிவிடும் எனக் கிரிக்கெட் உலகம் கண்டனம் தெரிவித்து வருகிறது.