சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் பிரமாணப்பத்திரத்தை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாஜக தேசியக் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கேரள மாநிலம் பந்தளத்தில் நடந்த சபரிமலை சமரக்ஷண சங்கமத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், பிரம்மச்சாரியான ஐயப்பனின் புனிதத்தைக் காக்கும் ஒரு தெய்வீக நிகழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்டுகள் மற்றும் அவர்களின் கூட்டணியான திமுக, தேர்தல் சமயத்தில் நடத்தும் அரசியல் நாடகத்தால், லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடக் கூடாது என்றும், சனாதன தர்மத்தைப் பாதுகாக்க ஒரு தீர்மானமான அரசியல் மாற்றத்திற்கான நேரம் தான் இது என்றும் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் திரும்பப் பெற வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.