தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? - அண்ணாமலை கேள்வி!
Mar 15, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூகநீதி என்று உதட்டளவில் பேசி நாடகமாடும் திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தூய்மைப் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக, தலா ₹40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல், கையுறை கூட வழங்கப்படாமல், தூய்மைப் பணியாளர்கள் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கையில், தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், சுமார் 50 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், திமுக அரசு இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், வீண் விளம்பரங்களுக்குச் செலவு செய்து கொண்டிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு வருவதற்கு, இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்? சென்னை ஐஐடி மாணவர்கள், தூய்மைப் பணியை மேற்கொள்ள, ஹோமோசெப் மற்றும் சிப்பாய் ஆகிய இரண்டு ரோபோக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவற்றைப் பயன்பாட்டில் கொண்டு வர ஏன் திமுக அரசு இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தனது தந்தைக்குச் சிலை வைக்க, மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு
நேரமும் நிதியும் இருக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? சமூகநீதி என்று உதட்டளவில் பேசி நாடகமாடும் திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: DMKMK StalinIs there no money to buy the necessary equipment for sanitation workers? - Annamalai Questionசமூகநீதி
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

Related News

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies