ரஷ்யாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400ஐ இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்த பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ரஷ்யாவின் எஸ்-400களை வாங்க 2018-ம் ஆண்டு அக்டோபா் 5-ம் தேதி மத்திய அரசு 40 ஆயிரம் கோடி ரூபாயில் ஒப்பந்தம் மேற்கொண்டது.
ரஷ்யாவிடம் எஸ்-400 வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த 2021-ம் ஆண்டு எச்சரித்திருந்தது. இதைப் பொருப்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடம் எஸ்-400-ஐ வாங்கியது.
இந்தச் சூழலில், கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ சண்டையில் இந்தியாவின் வான் பாதுகாப்பை எஸ்-400 சிறப்பாகக் கையாண்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தின்படி மேலும், ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்களை ஒப்படைக்கும் பணி அடுத்தாண்டு நிறைவடையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது
ஏற்கனவே நான்கு எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.