அமமுகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தது வெளிப்படையான சந்திப்பு எனவும், அவரை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும்படி வலியுறுத்தியதாகவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னைப் போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தது வெளிப்படையான சந்திப்பு என்றும் அவரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும்படி வலியுறுத்தினேன் என்று அண்ணாமலை கூறினார்.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை என்று கூறியவர், ரஜினிகாந்த் உடனான சந்திப்பு அரசியல் சந்திப்பு இல்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜய் விமர்சனத்தை வரவேற்பதாகவும், சிங்கப்பூர், துபாய், ஐரோப்பிய நாடுகளின் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.
திமுகவுக்கு எதிரான கருத்தை தெரிவித்தால் அவர்கள் பாஜகவின் பி டீ எம் எனக்கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்தியாவிலேயே ஒரு சபாநாயகர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அப்பாவு விளங்குவதாகவும் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.