சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி அருகே, குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள திறந்த வெளியில் கொட்டி, நகராட்சி ஊழியர்கள் தீயிட்டு எரிப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகைப் பரவுவதால், பொதுமக்களும், நோயாளிகளும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் அலட்சியமாகச் செயல்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.