ராஜஸ்தானில் காவல்துறை வாகனம் மீது ஏறி அடாவடி செய்த இளைஞர் மற்றும் அவரது காதலியான சிறுமியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோட்டா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
தேடுதல் வேட்டையில் சிறுமியும் அவரது காதலரான 22 வயதான இளைஞரும் ராம்புரா பகுதியில் சுற்றித் திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் வரமறுத்த அவர்கள், காவல்துறை வாகனம் மீது ஏறி ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதுடன் போலீசாரையும் வசைபாடினர்.
இதையடுத்து இருவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக ராம்புரா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இளைஞர் மீது பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டது, மக்களைத் தொந்தரவு செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.