தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இத்தாலி நாட்டின் மெடா நகரம் தண்ணீரில் மிதக்கிறது.
சமீப நாட்களாக இத்தாலியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்களுக்குத் தண்ணீர் சீறிப் பாய்ந்து சென்றது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. அத்துடன் ஆறுகளிலும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
பெரும் வெள்ளப்பெருக்குக் காரணமாக பல்வறு மேடா, மிலன் நிகுவார்டா உள்ளிட்ட நகரங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.