மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வடகிழக்கு பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழைப்பொழிவு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கொட்டி தீர்த்த கனமழையால், மக்கள் அதிகம் வசிக்கும் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலையில் தேங்கிய மழைநீர் காரணமாக போக்குவரத்து முடங்கியது. சுமார் ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
இதனிடையே வரும் 26-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.