காந்தாரா சாப்டர்1′ படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் ‘காந்தாரா’.
இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூலைக் குவித்தது.
இதனைத் தொடரந்து இப்படத்தின் 2வது பாகம் காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் உருவாகி உள்ளது.
வரும் 2ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.