அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், டிரம்பின் வருகைக்காகப் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
நியூயார்க் நகரத்தில் வரும் 29-ம் தேதி வரை ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொள்வதற்காகப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நியூயார்க் சென்றிருந்தார்.
இந்தச் சூழலில், சாலையில் சென்று கொண்டிருந்த மேக்ரான் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது காவல்துறையினரிடம் அவர் விளக்கம் கேட்டதற்கு, அதிபர் டிரம்ப்பின் வருகையை ஒட்டிச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினர்.
இதனைக் கேட்ட மேக்ரான் உடனே தனது செல்போனை எடுத்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அழைத்தார்.
உடனே அழைப்பை எடுத்த டிரம்ப்பிடம், எப்படி இருக்கிறீர்கள், உங்களின் வருகைக்காகச் சாலையில் காக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சிரித்த முகத்துடன் நகைச்சுவையாகக் கூறினார்.
இதனைதொடர்ந்து டிரம்ப்பிடம் செல்போனில் பேசிக் கொண்டே அவர் சாலையில் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.