ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய்யை வாங்குவதன் மூலம் சீனாவும் இந்தியாவும் உக்ரைன் போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக திகழ்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொது சபையின் 80வது கூட்டம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைனில் மோதலுக்கு நிதியளிக்கும் நாடுகளின் பங்கை எடுத்துரைத்தார்.
ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய்யை வாங்குவதன் மூலம் சீனாவும் இந்தியாவும் உக்ரைன் போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக உள்ளனர் என குற்றம்சாட்டிய டிரம்ப், ஐநா சபை அமைதியை நிலைநாட்ட வழிவகை செய்யவில்லை என விமர்சித்தார்.
மேலும், ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.