கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைநகர் பெங்களூருவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க தலைநகர் பெங்களூரு முழுவதும் சாலைகள் சேதமடைந்து காணப்படுவதாகத் தொடர் புகார் எழுந்து வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பாஜக எம்எல்ஏ கே. கோபாலய்யா உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைகளில் உள்ள பள்ளங்களில் ஜல்லி கற்களை கொட்டி அதில் துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாரின் படத்துடன் கூடிய பதாகைகளை நட்டு வைத்துக் கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.