ராணிப்பேட்டையில் பெண்கள் பலர் இணைந்து உடற்பயிற்சி செய்து ஒரே மாதத்தில் 200 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உடற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய முயற்சியாக 40க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து ஆர்வமுடன் உடற்பயிற்சி மேற்கொண்டனர்.
42 பெண்கள் அடங்கிய இந்தக் குழு, ஒரே மாதத்தில் 201 கிலோ உடல் எடையை குறைத்து உலக சாதனை படைத்துள்ளது. பெண்களின் இந்தப் புதிய முயற்சியை தி கிங்டம் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
லண்டன் மேயர் சாதிக் கான் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்திற்கு பிரிட்டன் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐநா சபையில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், லண்டன் நகரின் முதல் இஸ்லாமிய மேயரான சாதிக் கானை கடுமையாக விமர்சித்தார்.
லண்டன் முழுமையாக மாறிவிட்டதாகவும், மிகவும் மோசமான மேயராக சாதிக் கான் இருப்பதாகவும், மிகவும் மோசமாக பணி செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் லண்டனில் குற்றம் உச்சத்தில் இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஷரியா சட்டம் பற்றி இதுவரை சாதிக் கான் எங்குமே குறிப்பிடாத நிலையில், டிரம்பின் கருத்துக்கு பிரிட்டன் கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளது. அதேபோல் லண்டன் மேயர் அலுவலகமும் டிரம்பின் கருத்து தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
டிரம்பின் வெறுப்பான மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துகளுக்குப் பதிலளித்து, அவற்றுக்கு மதிப்பளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. லண்டன் உலகின் சிறப்பான நகரங்களில் ஒன்று என்றும், பல அமெரிக்க நகரங்களை விடவும் பாதுகாப்பான நகரமாக உள்ளது என்றும் லண்டன் மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.