சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கச் சென்னை நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து கடந்த 22ம் தேதி காவல் துணை ஆணையர் வனிதா, ஜாய் கிரிசில்டாவிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
இந்தநி லையில் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.