லடாக்கின் லே பகுதியில் நடைபெற்ற வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி கோரி, அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு அங்குள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அங்கு வன்முறை வெடித்த நிலையில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்தனர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.
இந்த வன்முறையில் இதுவரையில் 4 பேர் உயிரிழந்தனர், 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.