நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டோனாவூரில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவர்கள் புகையிலை வைத்திருந்ததை ஆசிரியரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர்களை ஆசிரியர்கள் கண்டித்த நிலையில், புகார் தெரிவித்த மாணவனை சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதில் ஒரு மாணவன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை வைத்துப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவரை தாக்கியதோடு, தடுக்க வந்த மற்றொரு மாணவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆசிரியர்கள், காயமடைந்த மாணவர்களை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பிற மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் அரிவாள் பயன்பாடு இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது