கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆதிவராகநத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
அதில் ஒரு மாணவரின் உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சியடைந்த மாணவர், சமையலரிடம் புகாரளித்த நிலையில், அவர் இறந்து கிடந்த பல்லியை வெளியில் வீசியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அனைத்து மாணவர்களையும் வகுப்பறைக்கு அனுப்பிய சமையலர், பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார்.
இந்தத் தகவலை அறிந்த பெற்றோர், பள்ளியின் முன்பாகத் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உணவில் பல்லி கிடந்ததை அறிந்து நீண்ட நேரமாகியும் மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று, பெற்றோர் குற்றம்சாட்டினர்.