இந்திய விமானப்படைக்காக 97 தேஜஸ் Mk-1A போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படைக்காக 97 தேஜஸ் Mk-1A போர் விமானங்களை வாங்க மத்திய அரசு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்காக அந்நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் 62 ஆயிரத்து 370 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாராகும் இந்த 97 போர் விமானங்களில், 68 ஒற்றை இருக்கை கொண்டவை என்றும், 29 இரட்டை இருக்கை கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானங்களை 2027-ல் தொடங்கி ஆறு ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.