நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகாரில் முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 75 லட்சம் பெண்களுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தும் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். பெண்கள் பொருளாதார ரீதியில் சுயமாக இருப்பதை உறுதி செய்ய இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொழில் தொடங்க முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்த தவணைகளில் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, சுயதொழில் செய்வதால் பெண்களுக்குச் சமூகத்தில் மரியாதை மேலும் அதிகரிப்பதாகக் கூறினார்.
நாட்டிலுள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆர்ஜேடி ஆட்சியின் போது, பீகாரில் எந்த ஒரு வீடும் பாதுகாப்பின்றி காணப்பட்டதாகவும், நக்சல் வன்முறையின் பயங்கரவாதம் பரவலாக இருந்ததாகவும் கூறினார்.