சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமராவதி உணவகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டிடிகே சாலையில் உள்ள அமராவதி உணவகத்திற்கு வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு சோதனை மேற்கொண்டனர். சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், உணவகத்தின் உரிமையாளரான நீனா ரெட்டிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தினர்.
5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று மதியம் 12 மணியளவில் சோதனையை தொடங்கிய நிலையில், உணவக மேலாளர் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.