கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டுவை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கரூர் விவகாரம் தொடர்பாக இணையத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பியதாக 25 சமூக வலைதளங்கள்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர்பாக இணையத்தில் வதந்தி பரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்துப் போலீசார் கைது செய்தனர்.