திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 6 ஆம் நாளில் மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் பவனி வந்து அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அந்த வகையில் பிரம்மோற்சவத்தின் 6 ஆம் நாளில் மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது தங்க ரதத்தை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.